TNEA 2025: தமிழ்நாடு பொறியியல் படிப்புகளில் சேர்க்கை மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்

TNEA 2025: தமிழ்நாடு பொறியியல் படிப்புகளில் சேர்க்கை மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் (TNEA Counselling 2025 Registration) நாளை மறுநாள் முதல் விநியோகிக்கப்படுகிறது.  இது ஜூன் 6ஆம் தேதி வரை வழங்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.  அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு, புதுவையில் 8.51 லட்சம் மாணவர்கள் எழுதினர். அது போல் தனித்தேர்வர்களாக 23,747 பேர் என மொத்தம் 8.75 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மாணவர்கள் தமிழக அரசு கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 7ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துல்ளது.

7ஆம் தேதி காலை 10 மணிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், விண்ணப்பப்பதிவை தொடங்கி வைக்கிறார். ஆன்லைன் மூலமாக https://www.tneaonline.org மட்டுமே மாணவர்கள் விண்ணப்ப பதிவை மேற்கொள்ள முடியும்.

மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும். தரவரிசை பட்டியலின் கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளில் விரும்பும் படிப்புகளை தேர்வு செய்யலாம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் வரும் 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த தரவரிசை பட்டியல் ஜூலை 2ஆம் வாரம் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து ஜூலை இறுதிக்குள் கலந்தாய்வு தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.