தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் விலங்கியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை, Life Science Forum சார்பில் (“Future Path: Launch Your Career”) எதிர்காலப் பாதையில் உங்கள் பணியைத் தொடங்குங்கள் என்ற தலைப்பில் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி 05 மார்ச் 2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையத்தின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையத் முகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விலங்கியல் துறை மாணவர்களுக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் எதிர்கால முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சி விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர் ராதிகா மற்றும் துறைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விலங்கியல் துறையின் இளநிலை இறுதி ஆண்டு மற்றும் முதுநிலை மாணவர்கள் மொத்தம் 55 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.