முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

                            முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

10 மற்றும் 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு சான்றிதழ் வழங்கும் பாராட்டு விழா நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 25 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியானதும், 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சேகரிக்க வேண்டும்.
இது அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் ஒரு நல்ல தொடக்கம்ஆகும்.

சுற்றரிக்கை

இதனை தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெரும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து 10 நாட்களுக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை  அனுப்பி உள்ளது.