நீட் தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் 1800 பேர் விண்ணப்பித்து எழுதுகின்றனர்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2025- 2026 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது.நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.
தேர்வு மையத்திற்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது சென்னையில் 44 மையங்களில் 21,960 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 மையங்கள் மையங்களில் 1800 பேர் எழுதுகின்றனர்

இதில், தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி மையத்தில் 480 பேர், தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 பேர், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 360 பேர், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 480 பேர் என மொத்தம் 1,800 மாணவர்-மாணவிகள் விண்ணப்பித்து தற்போது தேர்வு எழுதுகின்றனர்.












