நாளை நீட் தேர்வு – விதிமுறைகள்

                                                                            நாளை நீட் தேர்வு – விதிமுறைகள்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2025- 2026 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது.நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.

தேர்வு மையத்திற்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதற்கு மேல் வருவோருக்கு அனுமதி கிடையாது. கூடுதல் விவரங்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். சென்னையில் 44 மையங்களில் 21,960 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.  முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது.
தலை முடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் போன்ற வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும்.