தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வரும் ஜூன் மாதம் ஜப்பானிய மொழிப் பயிற்சி வகுப்புகள் துவங்க இருக்கிறது

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியும், சென்னை தியா வெளிநாட்டு மொழி அகாடமியும் இணைந்து வரும் ஜூன் மாதம் அனைவரும் பயன்பெறும் வகையில் ஜப்பானிய மொழிக்கான நேரடி சான்றிதழ் வகுப்புகள் நடத்த உள்ளன.

N5 level வகுப்புகள், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் வீதம் 35 வகுப்புகள் நடைபெற உள்ளன. ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்வது உலகளாவிய வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது.

இச்சான்றிதழ் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வ. உ. சிதம்பரம் கல்லூரியில் நடைபெற உள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

முனைவர். அஜித் -9446796994

முனைவர். ஜாக்சன்-7708437190