தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் இளைஞர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் இளைஞர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த கல்வி ஆண்டில் வ. உ .சிதம்பரம் கல்லூரியின் கலைக்குழு தூத்துக்குடி JCI கலை போட்டிகளில் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக முதலிடம், காமராஜர் கல்லூரி வணிகவியல் துறை நடத்திய கலை போட்டி COMM QUEST இல் முதலிடம், தூத்துக்குடி மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய மாநில அளவிலான fisfest கலைப் போட்டிகளில் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக முதலிடம்.

திருநெல்வேலி தூய சேவியர் பொறியியல் கல்லூரி நடத்திய மாநில அளவிலான FXTASY கலைப்போட்டியில் இரண்டாமிடம், காமராஜர் கல்லூரி சுயநிதி வணிகவியல் துறை நடத்திய COMM EVER ACE போட்டியில் வெற்றி, தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் நடத்திய பாதுகாப்பு வாரத்தில் பரிசுகள், பொருநை இலக்கிய விழா என பல சாதனைகளை படைத்தது. இதில் பங்கேற்று சாதனை புரிந்த மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டது.

வ. உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர்.முனைவர். வீரபாகு முன்னிலை வகித்தார். வ.உ. சிதம்பரம் கல்லூரியின் செயலர் ஏ. பி.சி. வீ.சொக்கலிங்கம் மாணவ மாணவியர்களை பாராட்டி விருது வழங்கியதோடு, இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஜாக்சன் மற்றும் இளைஞர் நலத்துறை குழு உறுப்பினர்கள் முனைவர்.இர்வின், முனைவர். சந்திரா, முனைவர். கிறிஸ்டினாள் மற்றும் பேராசிரியை பொன். கனகா ஆகியோரை பாராட்டினார்கள்.