தூத்துக்குடி தச்சர் தெரு நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் இஸ்ரவேல் ஆபிரகாம் என்ற மாணவர் தேசிய திறனாய்வுத் தேர்வில் 101 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மாணவர் இஸ்ரவேல் ஆபிரகாமை பள்ளி நிர்வாகி மற்றும் தாளாளர் எமர்சன் உதய்சிங் பாராட்டி பரிசு வழங்கினார்
மேலும் தேர்வுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளி நிர்வாகி மற்றும் தாளாளர் வெகுவாக பாராட்டினார்.
வட்டாரக்கல்வி அலுவலர் சரஸ்வதி தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவரையும், பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.












