தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை தொடங்குகிறது

1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து கோடை விடுமுறை 45 நாட்கள் நாளை முதல் தொடங்குகிறது.

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

அவர்களுக்கு வரும் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.