பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி அறிமுக வகுப்பு.

தமிழக அரசின் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடாக 1098 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி நம்பரின் பயன் குறித்து ம.தி.தா இந்துக்கல்லூரி மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிக்கு ஓர் அறிமுக வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுஷ்மா கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம், பள்ளி ஆசிரியைகள் ராஜலட்சுமி, பிரேமா, ஆசிரியர் சொக்கலிங்கம் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்கள்.