ஜீன் 2 – பள்ளிகள் திறப்பு : தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

                                                                       ஜீன் 2 – பள்ளிகள் திறப்பு :
                          தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 30.04.2025.

மேலும் 01.05.2025 முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது . இதனைத் தொடர்ந்து , 2025-26ஆம் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் 02.06.2025 ( திங்கள் கிழமை ) என அறிவிக்கப்படுகிறது .

அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த சுற்றரிக்கையில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.