கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மையே சேவை–2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண் 132 சார்பில், இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, “தூய்மையே சேவை – 2026” இயக்கத்தின் நிறைவு நாளான அக்டோபர் 17ஆம் தேதி, தூய்மையில் மக்கள் பங்கேற்பு, தூய்மையான பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தூய்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டுநலப் பணித்திட்டத் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, வளாகத்தைத் தூய்மைப்படுத்தினர். குப்பைகளை முறையாகச் சேகரித்தல், கழிவுகளைத் தரம் பிரித்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சியை ஊக்குவித்தல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைத் தவிர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நாட்டுநலப் பணித்திட்டத் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து தூய்மைப் பேணுதல் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.













