தூத்துக்குடி டிலைட் பப்ளிக் பள்ளியில் 4ஆம் ஆண்டு விளையாட்டு விழா !
தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு, டிலைட் பப்ளிக் பள்ளியில் 4ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி கப்பற் படை கமாண்டர் பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி வரவேற்றார். பள்ளித் தலைவர் ஜெய சீலன், பள்ளித் தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினரான கமாண்டர் பிரகாஷ் குமார் நடப்பு கல்வி ஆண்டில் கபடி, கோ கோ, கிரிக்கெட், கால்பந்து, குண்டு எறிதல், வட்டு வீசுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் ரிலே, மற்றும் 10 மீட்டர் ரைபில் துப்பாக்கி சூடும் போட்டி போன்ற விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு நடைபெற்ற கிரிக்கெட் மற்றும் எறி பந்தாட்டம் விளையாட்டில் சிறந்து விளங்கிய பெற்றோர்களுக்கு பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் விளையாட்டு விழாவில் நடைபெற்ற மாணவர்களின் அணி வகுப்பு, ஓட்ட பந்தயம், அனைத்து மாணவர்களின் பங்களிப்பு பற்றியும், சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி பேசினார்.
விளையாட்டு விழாவில் சிலம்பம், கராத்தே, யோகா, டிரில், சிறுவர்களுக்கான நடனம், பிரமிடு, ஏரோபிக் நடனம், பரிசு பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நடனம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.












