தூத்துக்குடி மீளவிட்டான் டிலைட் பப்ளிக் பள்ளியில் “THOOTHUKUDI’S 1ST VICTORY” மாநில அளவிலான குழந்தைகள் செஸ் போட்டி :
அக்டோபர் 15 ம் தேதி முன் பதிவு செய்ய கடைசி நாள் !
தூத்துக்குடியில் PREMIER CHESS CARE CENTER மற்றும் RAINBOW CHESS ACADEMY இணைந்து நடத்தும் “THOOTHUKUDI’S 1ST VICTORY” மாநில அளவிலான குழந்தைகள் செஸ் போட்டி வரும் 18.10.2026, ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி மீளவிட்டானில் உள்ள DELIGHT PUBLIC SCHOOL வளாகத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கு TNSCA Event Code: CO179-TUT-26/27.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இளம் செஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. CB SPORTZ FOUNDATION® மற்றும் SATURN MULTI SPORTS ஆதரவளிக்கின்றன.
வயது பிரிவுகள் மற்றும் பரிசுகள்:
• Under-08 : பிறப்பு தேதி 01.01.2018 அன்றோ அதற்குப் பின்னரோ
• Under-10 : பிறப்பு தேதி 01.01.2016 அன்றோ அதற்குப் பின்னரோ
• Under-12 : பிறப்பு தேதி 01.01.2014 அன்றோ அதற்குப் பின்னரோ
• Under-16 : பிறப்பு தேதி 01.01.2010 அன்றோ அதற்குப் பின்னரோ
என நான்கு வயது பிரிவுகளில் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் 25 பரிசுகள் வழங்கப்படும்; ஒவ்வொரு பிரிவிலும் 20 பரிசுகளுடன் 5 தூத்துக்குடி சிறப்புப் பரிசுகளும் இடம்பெறும். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
போட்டிகள் Held Age Standard அடிப்படையில் வயது பிரிவு வாரியாக நடைபெறும்.
போட்டியின் சிறப்பம்சங்கள்:
பள்ளிகள், செஸ் அகாடமிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட வீரர்களைப் பதிவு செய்யும் பள்ளி / அகாடமி / நிறுவனத்திற்கு “PREMIER CHESS TROPHY” வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டி Rapid முறையில் 15 நிமிடங்கள் + ஒவ்வொரு நகர்வுக்கும் 5 விநாடிகள் (15 min + 5 sec increment) என்ற நேரக் கட்டுப்பாட்டில் நடைபெறும். முதல் சுற்று காலை 10.00 மணிக்குத் தொடங்கும். போட்டி தமிழ்நாடு வீரர்களுக்கு மட்டும் திறந்திருக்கும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் 15.10.2026 மாலை 5.00 மணி. நுழைவுக் கட்டணம் ஒரு வீரருக்கு ₹400 ஆகும்.
TNSCA வீரர் பதிவு அனைத்து தமிழ்நாடு வீரர்களுக்கும் கட்டாயமாகும். 2026-2027 ஆண்டிற்கான TNSCA பதிவு கட்டணம் ₹150. வீரர்கள் போட்டிக்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்.
இணையதள பதிவு / Website: www.cbsportzfoundation.in, www.chessfee.com
தொடர்பு எண்கள் / Mobile: 9486492724 / 9488947336
மின்னஞ்சல் / Email: premg.27@gmail.com
இப்போட்டியின் Tournament Director ஆக Dr. Chockalingam Balaji U, IA/FSI செயல்படுகிறார். இவர் CB Sportz Foundation Founder & General Secretary ஆவார்.












