தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் லிவோரா 2026 கண்காட்சி :
பள்ளி மாணவர்களை கவர்ந்த காட்டு வாழ்க்கை ( வைல்டு லைஃப்) மற்றும் மெல்டிங் மேன்!
தூத்துக்குடி பாரம்பரிய மிக்க வ.உ.சிதம்பரம் கல்லூரி தனது 75 வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது.
அதனை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக லிவோரா 2026 கண்காட்சி நேற்று தொடங்கி தொடர்ந்து சனிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.அதில் காடுகள் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி இன்றைய மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காட்சியில் பல்வேறு படைப்புகள் வைக்கப் பட்டுள்ளன.

நேற்று கண்காட்சியின் முதல் தினமான 07 புதன்கிழமை ஏபி.சி.வீரபாகு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி,டிலைட் பப்ளிக் பள்ளி, செயின்ட் தாமஸ் சிபிஎஸ்இ பள்ளி உட்பட 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியை காண வருகை தந்தனர்.
கண்காட்சியில் வெளிநாட்டு பறவைகள், மியூசியம், பார்வையாளர்களுக்கு கைகொடுத்து வரவேற்கும் ரோபோ உட்பட பல்வேறு ரசிக்கத்தக்க நிகழ்வுகள் இருந்தாலும் மாணவர்களை மிகவும் கவர்ந்தது மெல்டிங் மேன் மற்றும் காட்டு வாழ்க்கை ( வைல்டு லைஃப் ).
இந்த மெல்டிங் மேன் மற்றும் வைல்டு லைஃப் அரங்கினுள் நுழைந்தவுடன் மாணவர்கள் உற்சாக ஒலி அரங்கத்தை அதிர வைத்தது.
காட்டு வாழ்க்கை விலங்குகளுக்கு எவ்வாறு அமைந்துள்ளது,மெல்டிங் மேன் அரங்கில் ஒரு ஆண் எலும்புக்கூடாக மாற்றம் தந்து பின்னர் பெண்ணாக மாறுவது மனதை நெகிழச் செய்கிறது.
அக்டோபர் 07 புதன் முதல் 10 ம் தேதி சனிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை காண அழைக்கிறது வ.உ.சிதம்பரம் கல்லூரி நிர்வாகம்.
மாலை 5.30 மணிக்கு மேல் பெட் ஷோ, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதனால் இக்கண்காட்சி ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும் மனதினை குளிரச் செய்கிறது.அதனைப் போல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டால்கள் உள்ள உணவுகள் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெரியவர்களின் வயிற்றை குளிரச் செய்கிறது
கண்காட்சிக்காக வந்துள்ள குதிரை ( ஜேக் ) மற்றும் ஒட்டகம் ( சுல்தான் ) குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
கண்காட்சிக்கு வரும் அனைவரும் அதனுடன் ஷெல்பி, போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.
மேலும் வ.உ.சி.கல்லூரி ஷெல்பி பாயிண்ட் கண்காட்சியை மெருகூட்டுகிறது.
10 ம் தேதி முழு நேரம் அனைவரும் பார்வையிட அனுமதி :
கண்காட்சி முதல் நாளே களைகட்டியதனால் மீதம் உள்ள 3 நாட்களும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகமாகும் என்ற காரணத்தினாலும், அனைவரும் பார்வையிட வேண்டும் என்ற காரணத்தினாலும் கண்காட்சியின் கடைசி நாளான சனிக்கிழமை 10 ம் தேதி முழுநேரமும் அனைவரும் பார்வையிடலாம் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.












