தேசிய தடகளப் போட்டிக்கு கோவில்பட்டி கே.ஆர்.கல்லூரி மாணவன் மாதேஷ் தகுதி !

தேசிய தடகளப் போட்டிக்கு கோவில்பட்டி கே.ஆர்.கல்லூரி மாணவன் மாதேஷ் தகுதி !

40வது தமிழ்நாடு ஜூனியர் தடகளப் போட்டி, திண்டுக்கல் N.P.R. பொறியில் கல்லூரி விளையாட்டு அரங்கில் 02.10.2026 முதல் 05.10.2026 வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவில்பட்டி கே.ஆர். கல்லூரியின் மாணவர் மாதேஷ் (under-20) மும்முறை தாண்டுதல் போட்டியில் (டிரிபிள் ஜம்ப்) 14.30 மீட்டர் தாண்டி மாநிலத்தில் முதலிடம் பெற்று தேசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்றார்.

 

தேசிய தடகள போட்டி 24-10-2026 முதல் 27-10-2026 வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.அதில் மாணவன் மாதேஷ் பங்கேற்க உள்ளார்.

தேசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்ற மாணவனை கல்லூரியின் தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவிகள் பாராட்டினர்.