தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் சமூக நலன் சேவைகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் சமூக நலன் சேவைகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) மற்றும் தேசிய மாணவர் படை (NSS) அலகுகளின் சார்பில், கல்லூரியில் தொடர்ந்து இரத்ததான முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

கல்லூரியில் தொடர்ந்து இரத்ததான முகாம்களை சிறப்பாக ஏற்பாடு செய்து, சமூக நலனில் ஆற்றிவரும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்தப் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றது கல்லூரிக்கு பெருமைக்குரிய நிகழ்வாகும்.

 

இச்சிறப்பான சமூக சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வரும் YRC மற்றும் NSS ஒருங்கிணைப்பாளர்களை கல்லூரி முதல்வர் முனைவர் C. வீரபாகு அவர்கள் பாராட்டினார். மேலும், இரத்ததான முகாம்களை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்துவதில் உறுதுணையாக இருந்த ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.