தூத்துக்குடி வ.உ.சிதம்பம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது !

தூத்துக்குடி வ.உ.சிதம்பம் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது !

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலகுகள் எண் 68, 69, 70 சார்பாக அறிமுக நிகழ்ச்சி இன்று (30.9.2026) கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தலைமை வகித்தார்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.வெள்ளியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்.செல்வம், முனைவர்.கிருஷ்ணன், மற்றும் முனைவர். ஆரோக்கிய செல்வ சுந்தரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.