கோவில்பட்டி, சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 நாட்கள் என்.எஸ்.எஸ். முகாம் நடைபெறுகிறது !
சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், என்.எஸ்.எஸ். முகாம் 26.09.2026 முதல் 02.10.2026 வரை நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற முகாமில் முகாம் தலைவர் தலைமை ஆசிரியர் நாகலிங்கம் தலைமையேற்றார் .
உதவித் தலைமை ஆசிரியர் கோச்சிமின் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கோவில்பட்டி முத்தமிழ் மன்றம் அறக்கட்டளை செயலாளர் நன்னெறி ஆசிரியர் லயன் பிரபு போதைப் பொருளினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் காமராஜ் மற்றும் கழுகுமலை கம்மவார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரேவதி ஆகியோர் போதைப் பொருள் விழிப்புணர்வு பற்றிய கேள்வி பதில் முறையில் மாணவ- மாணவியர்களோடு கலந்துரையாடல் செய்தனர். இந்நிகழ்வில் பள்ளி நூலகத்திற்கு சிறப்பு விருந்தினர் பிரபு நூல்களை பரிசளித்தார்.
என்.எஸ்.எஸ். முகாம் திட்ட அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார் .












