கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது !
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண் 132 சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை வலியுறுத்தும் வகையில் “பனை விதை நடவு நிகழ்ச்சி – 2026” 25.09.2026 நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேச்சிமுத்து, வனக்காவலர், குருமலை வனப்பகுதி, கோவில்பட்டி வனச்சரகம், கலந்து கொண்டு பனை மரங்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, ஆலம்பட்டி கண்மாய் கரைப்பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் மாணவர்களின் பங்கேற்புடன் நடவு செய்யப்பட்டன.

பனை விதைகளை முறையாகத் தேர்வு செய்தல், நடவு செய்தல் மற்றும் எதிர்காலத்தில் அவற்றைப் பராமரித்தல் தொடர்பான நடைமுறை வழிமுறைகளும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி நாட்டுநலப் பணித்திட்ட அணி எண் 132, பேராசிரியர்கள் மற்றும் NSS தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்.












