கல்லூரிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி முதலிடம் !
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் 24-09-2026 அன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. அரை இறுதி போட்டியில், தூத்துக்குடி APC மகாலட்சுமி கல்லூரி அணியை 9 – 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கே.ஆர். கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் அணியை 18 – 5 என்ற கோல் கணக்கில் கே.ஆர். கல்லூரி அணி வெற்றி பெற்றது .

முதலிடம் பிடித்த கே.ஆர். கல்லூரி அணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் Rs.48,000/- ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் தலைவர், துணைத் தலைவர், கல்லூரியின் தாளாளர் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்., உடற்கல்வி இயக்குனர், பயிற்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.












