தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் நிகழ்வு !

தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் நிகழ்வு !

தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் NSS – National Service Scheme , Unit Number -229 சார்பில் 24.09.2026 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் “ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம்” வெள்ளப்பட்டி கிராமத்தில், அதிசய மாதா கடற்கரைச் சாலையோரம் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர்.இளங்குமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சியில், 25 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று 1000 பனை விதைகளை நட்டார்கள்.

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மண்வளம் மற்றும் இயற்கை வளப்பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், பொறுப்புணர்வையும், ஏற்படுத்தியது.

கல்லூரி முதல்வரின் ஆலோசனையின்படி, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.செல்லக்கனி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் தவமணி மனோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.