சாயர்புரம் டாக்டர் ஜி.யூ.போப் கல்வியியல் கல்லூரியில் சாரணர் நிகழ்ச்சி நடைபெற்றது !

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், டாக்டர் ஜி.யூ. போப் கல்வியியல் கல்லூரியில் சாரணர் – சாரணியர் (Scout) வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி 17.09.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை சங்கரன் ஆவுடையப்பன், (மாவட்ட பயிற்சி ஆணையர், பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டி கல்வி அறக்கட்டளை,திருநெல்வேலி) வழிநடத்தினார்.

நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர். அம்சவேணி வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார்.சங்கரன் ஆவுடையப்பன் (Scout Master) நிகழ்ச்சியை வழிநடத்தி பேசியபோது,

வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள் மற்றும் சுவாரஸ்யமான கதைகளைப் பகிர்ந்தார். தன்னம்பிக்கை தரும் ஊக்கமளிக்கும் பாடல்களைப் பாடியும், ஆடியும் உற்சாகமூட்டினார். வாழ்க்கையில் தேவையற்ற எண்ணங்கள் மற்றும் செயல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதனைப் பற்றி விளக்கினார். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவர் கற்றுக்கொடுத்த பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.

காகிதம் கொண்டு மிக அழகாக விதவிதமான தொப்பிகள் தயாரிப்பது பற்றி மாணவர்களுக்கு கற்பித்தார். மாணவர்களும் உற்சாகத்துடன் அவற்றை செய்து அணிந்து மகிழ்ச்சி கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.














