தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம் !

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று 20 மாணவர்கள் இரத்ததானம் செய்தனர். கோவில்பட்டி இரத்த வங்கியின் மருத்துவர் T. பாலசுப்ரமணியன், பயிற்சி மருத்துவர் மணி சங்கர் மருத்துவர் கோகுல், ஆய்வகத் தொழில்நுட்ப நிபுணர் சேவியர், சுகாதாரத்துறை செவிலியர் மணிமேகலை, கனகலெட்சுமி, இவர்களுடன் ஓட்டப்பிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் கோகுல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, மருத்துவ அலுவலர் பிரஜீத்,சுகாதார ஆய்வாளர் கங்காதரன், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

முதல்வர் முனைவர். இளங்குமரன் தலைமை வகித்து இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்.இரத்ததானத்தின் அவசியம் அதன் மூலம் பிறரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்து மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர்.

இம்முகாம் மாணவர்களிடையே இரத்ததானம் குறித்த விழிப்புணர்வையும், சமூக சேவை உணர்வையும், ஏற்படுத்தியதுடன் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முதல்வரின் ஆலோசனையின்படி கணிதத்துறை தலைவர் திருமதி. பா.மாலதி (YRC) இளைஞர் செஞ்சிலுவைச்சங்கம், தமிழ்த்துறை தலைவர் முனைவர். வே. செல்லக்கனி (NSS) நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர், மற்றும் வணிகநிர்வாகவியல் தலைவர் கு. தனலெட்சுமி (RRC) சிவப்பு நாடா மன்ற அலுவலர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.













