தூத்துக்குடி காமாட்சி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு ( AI ) பயிலரங்கம் : வ.உ.சிதம்பரம் கல்லூரி நடத்தியது !

தூத்துக்குடி காமாட்சி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு ( AI ) பயிலரங்கம் :
வ.உ.சிதம்பரம் கல்லூரி நடத்தியது !

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் காமாட்சி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) தொடர்ச்சியாக, காமாட்சி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்காக “From Bot to Mentor” என்ற தலைப்பில் பயனுள்ளதும், உத்வேகம் அளிப்பதுமான செயற்கை நுண்ணறிவு (AI) பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கில் வ.உ. சிதம்பரம் கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.குற்றாலிங்கம் சிறப்பு வளநபராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த விளக்கங்களை வழங்கினார்.

இப்பயிலரங்கின் வாயிலாக, செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் பங்கு குறித்தும், வெறும் ஒரு கருவியாக மட்டுமின்றி, எவ்வாறு செயற்கை நுண்ணறிவை அர்த்தமுள்ள கற்றல் துணையாகவும், வழிகாட்டியாகவும் பயன்படுத்த முடியும் என்பதையும் மாணவர்கள் பயனுள்ள முறையில் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
விளக்கவுரை மற்றும் நடைமுறை சார்ந்த கருத்துகள் ஆகியவற்றால் இப்பயிலரங்கம் தகவலளிப்பதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாக மாணவர்களுக்கு அமைந்தது.