தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் கிறிஸ்தவ பெண்கள் சங்கம் (YMCA) நடத்திய தனிப்பாடல் மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது !

தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் கிறிஸ்தவ பெண்கள் சங்கம் (YMCA) நடத்திய தனிப்பாடல் மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது !

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் குறுக்கு வட்டத்தில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.09.2026 திங்கட்கிழமை அன்று மதியம் 12.00 மணியளவில் கல்லூரி கலையரங்கில் தனிப்பாடல் மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றன.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர்.இளங்குமரன் தலைமையேற்றார்.நிகழ்ச்சியில் கிறிஸ்தவ இளம் பெண்கள் சங்கத்தின் தலைவரான கிரிக்ஷெல்டா ஐசக் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இளம் கிறிஸ்துவ பெண்கள் சங்கத்தின் உதவிப்பொருளாளர் ஸ்டெஃபி, கிறிஸ்தவ இளம் பெண்கள் சங்கத்தின் திட்ட மேலாளர்.க்ஷெர்லீன் ஜெசியா மேலும் நிர்வாகக்குழு உறுப்பினர் சுதா சுரேக்ஷ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை ஒருங்கிணைத்தார்கள்.

“இயற்கை” மற்றும் “தேசப்பற்று” ஆகிய கருப்பொருளை மையமாகக் கொண்டு தனிப்பாடல் போட்டி (Solo Singing) மற்றும் ஓவியப்போட்டிகள் (Drawing) நடைபெற்றன. இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிபடுத்தினர்.

இந்நிகழ்ச்சி மாணவர்களின் இசை, ஓவியம், படைப்பாற்றல், தன்னம்பிக்கை, மற்றும் தேசப்பற்று உணர்வை வெளிப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் போட்டிகளில் பங்கேற்றனர்.

தனிப்பாடல் போட்டியில் முதல்பரிசினை சண்முகராஜ் கணினி அறிவியல் துறை மூன்றாமாண்டு மாணவனும், இரண்டாம் பரிசினை முத்துப்பிரியா ஆங்கிலத்துறை, இரண்டாம் ஆண்டு மாணவியும் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஓவியப்போட்டியில் முதல்பரிசினை விமலா வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு, இரண்டாம் பரிசினை அஸ்ரீனா வணிகவியல்துறை மூன்றாம் ஆண்டு, மூன்றாம் பரிசினை பாலசூர்யா, வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு, மாணவனும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தனஸ்ரீ வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி வரவேற்புரை வழங்கினார். அபிக்ஷா வணிகவியல்துறை இரண்டாம் ஆண்டு மாணவி நன்றியுரை வழங்கினார். கார்த்திகா லெட்சுமி வணிகவியல்‍ துறை இரண்டாம் ஆண்டு மாணவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில் போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.

முதல்வரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி, முனைவர்.அகஸ்டின் அற்புத லிஸி வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர், மற்றும் செல்வி. ரேவநந்தினி ஆங்கிலத்துறை, உதவிப்பேராசிரியர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.