கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் (தொழில்சார் கணக்கு வைப்பு முறை) துறை ஆகியவற்றின் சார்பில் “உங்களுக்குள் இருக்கும் தொழில்முனைவோர் – உங்கள் வணிகத் திறனை கண்டறிதல்” என்ற தலைப்பில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, துறைத் தலைவர் வாழ்த்துரை வழங்கினார்.
தூத்துக்குடி புனித மரியன்னை தன்னாட்சிக் கல்லூரியின் வணிக நிர்வாகத் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியரும், தமிழ்நாடு தொழில்முனைவோர் மற்றும் புதுமை மேம்பாட்டுத் திட்டத்தின் முதன்மைப் பயிற்றுநருமான முனைவர்.காயத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், வணிகத்திற்கும் தொழில்முனைவிற்கும் உள்ள வேறுபாடுகள், புதிய தொழிலைத் தொடங்குவதற்கான படிநிலைகள் மற்றும் தொழில்முனைவோருக்குத் தேவையான திறன்கள் குறித்து விளக்கினார். அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்குப் புதுமையான தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார்.

மேலும், வடிவமைப்புச் சிந்தனை, திறனாய்வுச் சிந்தனை மற்றும் முன்மாதிரி உருவாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் தொழில்முனைவுத் திறனை அடையாளம் கண்டு, தன்னம்பிக்கை, புதுமையான சிந்தனை மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு, வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாகவும் உருவாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதல்வர், துறைத் தலைவர், தொழில்முனைவோர் மற்றும் புத்தொழில் மைய உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.