தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகளை பதவியில் அமர்த்தும் விழா!

தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகளை பதவியில் அமர்த்தும் விழா!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் குறுக்குசாலை வட்டத்தில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் மாணவ நிர்வாக பேரவை பதவி ஏற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினர் மற்றும் கௌர விருந்தினர் மாணவர் பேரவை உறுப்பினர்களின் தலைமையில் ஊர்வலமாக அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப், தலைமை விருந்தினர் கீதாஜீவன், முன்னாள் சமூகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர், கௌர விருந்தினர் முனைவர்..  ரூபா, முதல்வர் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி, கல்லூரி முதல்வர், முனைவர்  இளங்குமரன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர் ஆகியோர் இணைந்து குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர். இளங்குமரன்  வரவேற்பு உரையாற்றினார். பின்னர் கல்லூரிச் செயலாளார் ஜீவன் ஜேக்கப்  சிறப்பு விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினருக்கு பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

பின்னர் கல்லூரி முதல்வர் தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் நிர்வாக பேரவை உறுப்பினர்களின் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. மாணவ நிர்வாக பேரவை உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவதாக உறுதிமொழி ஏற்றனர்.

கீழ்க்கண்ட மாணவர்கள் புதிய பேரவை நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

1. தலைவர் : மாரிலோகேஷ்  – மூன்றாமாண்டு வரலாற்றுத்துறை

2. துணைத்தலைவர் : அனுஸ்ரீ  – மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல்துறை

3. செயலர் : சிவ மாதேஷ் – மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல்துறை

4. இணைச்செயலாளர் : பரலோக அஸ்மிதா  – மூன்றாமாண்டு வரலாற்றுத்துறை

5. பொருளாளர் : விண்ணரசி  – மூன்றாமாண்டு வணிகவியல்துறை

6. மகளிர் பிரதிநிதி – பிருந்தா  – மூன்றாமாண்டு கணினி அறிவியல்துறை

துறை பிரதிநிதிகள்

1. சத்யா  – மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறை

2. உமா மகேஸ்வரி – மூன்றாமாண்டு வணிகவியல்துறை

3. மாரிச்செல்வி – மூன்றாமாண்டு வரலாற்றுத்துறை

4. அகிலன் சண்முகநாதன்  – மூன்றாமாண்டு கணினி அறிவியல்துறை

ஆங்கிலத்துறைத் தலைவர்  மரிய ஆண்டனி மோனிகா  கௌரவ விருந்தினரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மாணவர் நிர்வாக பேரவை உறுப்பினர்களுக்கான பதக்கங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் அணிவிக்கும் விழா நடைபெற்றது.

கௌரவ விருந்தினர் மாணவ நிர்வாக பேரவை உறுப்பினர்களுக்கு பதவி வில்லைகளை (Badge) அணிவித்தார். சிறப்பு விருந்தினருக்கு தோள்பட்டைகளை (Sash) வழங்கினார். கேளரவ விருந்தினர் முனைவர். ரூபா, முதல்வர் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி தொடக்க உரையாற்றினார்.

 

மாணவர்கள் தங்களது தலைமைப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கல்வி, ஒழுக்கம் மற்றும் சமூக சேவையில் பிற மாணவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்  கீதாஜீவன் சிறப்புரையாற்றி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் நிர்வாக பேரவை உறுப்பினர்களை வாழ்த்தினார். மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த தலைமைத்துவ வாய்ப்பைச் சிறப்பாக பயன்படுத்தி, கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் நலனுக்கும் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் நிர்வாக பேரவை உறுப்பினர்களைப் பாராட்டி வாழ்த்தினார்,

  1. அதன் பின் மாணவ நிர்வாகப் பேரவைத் தலைவர்  மாரிலோகேஷ் ஏற்புரையாற்றினார். மாணவர் நிர்வாக பேரவை செயலாளர்  சிவமாதேஷ்  நன்றியுரை வழங்கினார். இறுதியாக இவ்விழா தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுற்றது. முடிவில் பதவியேற்ற புதிய பேரவை நிர்வாகிகள் முக்கிய மற்றும் கௌரவ விருந்தினர்களிடம் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முதல்வரின் ஆலோசனையின்படி. துறைத்தலைவர்கள் இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.