தூத்துக்குடி ஏ. பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளின் சமூக சேவை!
தூத்துக்குடி ஆகஸ்டு 21 அன்று ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 47 & 57 சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் தூ. சவேரியார் புரத்தில் சமூக சேவை மேற்கொண்டனர்.

தொடக்க நிகழ்வாக RC உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் தேவாலய அருள் தந்தையும் தலைமைதாங்கி னர். கல்லூரி மாணவியர்கள் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசு வழங்கினர் தொடர்ந்து போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உரையாற்றினர்.

பிற்பகலில் முதல் நிலை டிபி சிகிச்சை அலுவலர் திரு. செல்வராஜ் மற்றும் மது ஷங்கர், உடல்நலத் துறை அதிகாரி ஆகிய இருவரும் காச நோய் அறிகுறிகள் நோய்த்தடுப்பு முறை குறித்து எடுத்துரைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனர். இந்நிகழ்வுகள் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஸ்டெல்லா பாக்கியம் முனைவர் புஷ்பகவல்லி ஆகியோருடன் 29 மாணவிகளும் இணைந்து செயலாற்றியிருந்தனர்.












