கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் 124 வது பிறந்தநாள் கொண்டாட்டம் !

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் 124 வது பிறந்தநாள் கொண்டாட்டம் !

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 124வது காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளான இன்று 15-07-2026 புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் உப தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் விழா தொடங்கப்பட்டது. சங்க செயலாளர் ஜெயபாலன் சங்க பொருளாளர் சுரேஷ் குமார் ஆகியோர் வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கணேஷ் பேக்கரி உரிமையாளர் இந்திர ராஜா கலந்து கொண்டார். பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம், பொருளாளர் பாஸ்கரன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் செல்வம், பொன்ராமலிங்கம், ஆகியோர் வருகைபுரிந்தனர்.

பள்ளி முதல்வர் பிரபு கல்வி வளர்ச்சி நாளின் கருத்து பற்றி சிறப்புரை ஆற்றினார். மாணவி ருத்ரா அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் காமராஜர் பிறந்தநாள் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பேச்சு, நடனம், மாணவ மாணவர்களின் உடற்பயிற்சி போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மாணவ கண்மணிகள் விழாவினைத் தொகுத்து வழங்கினர். மாணவி அனுஜா நன்றி கூறினார்.

விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியைகள் பிரியங்கா, சண்முகத்தாய், செல்வராணி மற்றும் இரு பால் ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் திரளான பெற்றோர்களும் கலந்துகொண்டனர். விழா முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு விழா நிறைவுற்றது.