சோழபுரம் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோர் – ஆசிரியர் குழுக் கூட்டம் நடைபெற்றது:
தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் ஸ்ரீ அண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோர் – ஆசிரியர் குழுக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சி கடவுள் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது . அடுத்தபடியாக வரவேற்புரை முதலாமாண்டு துறைத் தலைவர் பேராசிரியர் மதிகுமார் வழங்கினார். வாழ்த்துரையை கல்லூரியின் இயக்குனர் Dr. பிரேமலதா வழங்கினார். இதில் மாணவர்களின் ஒழுக்க முறைகள், வருகை, தேர்ச்சி சதவீதம், வேலைவாய்ப்பு போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்கள், மாணவர்களுக்கு அளிக்கக்கூடிய சலுகைகள் போன்றவற்றை கூறினார்.

தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குறைகளை நிர்வாகத்திடம் தெரிவித்தார்கள். இறுதியாக நன்றியுரையை மெக்கானிக்கல் (Mechanical) துறைத் தலைவர் ராஜாராம் வழங்கினார்.
அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் நலனைப் பற்றித் தெரிந்து கொள்ளத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து விபரம் அறிந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.












