உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கீழமுடிமன் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா :

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கீழமுடிமன் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா :

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கீழமுடிமன்னில் உள்ள புனித வளன் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித லசால் மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வேளாண்மைத் துறை அதிகாரி மனோரஞ்சிதம் மற்றும் மத்திய வனத்துறை அதிகாரி பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.

மேலும், பள்ளியின் தாளாளர் அருட்சகோதரர் ராபர்ட் செல்வராஜ், தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் அன்புநாதன் முதல்வர் ஆரோக்கியசாமி, இயக்குநர் வின்சென்ட் மற்றும் கண்காணிப்பாளர் அமலசுவக்கீன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.