எம்.ஜி. பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தராக மாவூத்து டி நியமனம் !
மகாத்மா காந்தி ( எம்.ஜி.) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியில் இருந்த சி.டி. அரவிந்தகுமார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு துணைவேந்தராக மாவூத்து டி நியமிக்கப்பட்டுள்ளார்..
திருவனந்தபுரம் மகாத்மா காந்தி (எம்.ஜி.) பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தராக மாவூத்து டி-யை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நியமித்துள்ளார்.

பதவியில் இருந்த துணைவேந்தர் சி.டி. அரவிந்தகுமார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (CUSAT) மேலாண்மை ஆய்வுகள் பள்ளியின் பேராசிரியரும் முன்னாள் இயக்குநருமான மாவூத்து நியமிக்கப்பட்டார்.
மாவூத்து மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும், CUSAT-ல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். மேலும் அவருக்கு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் 30 வருட அனுபவம் உள்ளவர்
லோக் பவன் வெளியிட்ட அறிவிப்பின்படி, துணைவேந்தராக நிரந்தர நியமனம் செய்யப்படும் வரை, மாவூத்து துணைவேந்தரின் அதிகாரங்களையும் கடமைகளையும் செயல்படுத்துவார்.












