பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் :
புதிய அரசு அறிவிப்பு!
கோடை விடுமுறைக்கு பின்பு வரும் ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்
1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் தகவல் வெளியான நிலையில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியே திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதியை ஜூன் 1-இல் இருந்து ஜூன் 5ஆம் தேதிக்கு மாற்றலாமா என முதலமைச்சர் ஜோசப் விஜய் , பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தர மோகன்,இயக்குநர் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது 4 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஜீன் 1 ம் தேதியும்,1 முதல் 3 ம் வகுப்பு வரை ஜீன் 4 ம் தேதியும் பள்ளிகள் திறக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்ட நிலையில் ஜீன் 1 ம் தேதியே அனைத்து வகுப்புகளும் திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஜீன் 1 ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.
முன்னதாக 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
DIPR-P.R.No.034-Hon’ble Minister for School Education Department – Press Release -Date 18-05-2026












