பள்ளிகள் திறப்பு ஜீன் 5 ம் தேதிக்கு மாற்றலாமா? முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு ஜீன் 5 ம் தேதிக்கு மாற்றலாமா?
முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதியை ஜூன் 1-இல் இருந்து ஜூன் 5ஆம் தேதிக்கு மாற்றலாமா என முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் முதல்வர் விஜய் இந்த ஆலோசனையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தர மோகன், இயக்குநர் உள்ளிட்டோருடன்  இன்று ஆலோசனை நடத்தினார்.

மேலும் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு நடத்தினார்.