தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை :
5 ஆயிரம் பேர் விண்ணப்பம் :
மே 18 வரை விண்ணப்பிக்கலாம்:

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங் களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
தமிழகம் முழுவதும் 7,688 தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1 ம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி இலவசமாக படிக்கலாம்.

தமிழகத்தில் 2013-ல் அமல்படுத்தப்பட்ட இந்த ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இது வரை சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டில் (2026-27) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்கியது. கடந்த 10நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேலானோர் விண்ணபித்துள்ளனர்.

மே 18-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் https://rteadmission.tnschools.gov.in/ என்ற இணை யதளம் வழி விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகப்பட்சம் தங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிகளில் நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்ததால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள் என்று துறை அதி காரிகள் தெரி வித்தனர்.












