ICSE 10-ஆம் வகுப்பு (2026) தேர்வு முடிவுகள் இன்று ஏப்ரல் 30 வெளியீடு:
ஏப்ரல் 30, 2026 வியாழக்கிழமை இன்று காலை 11:00 மணிக்கு CISCE வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட அடையாள எண் (UID), குறியீட்டு எண் (Index Number) மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி results.cisce.org இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்யலாம்.
அதிகாரப்பூர்வ தளங்கள்: cisce.org மற்றும் results.cisce.org.

தேவையான விவரங்கள்:
Unique ID, Index Number, மற்றும் CAPTCHA.
பிப்ரவரி 17 முதல் மார்ச் 30, 2026 வரை தேர்வுகள் நடைபெற்றது.
டிஜிலாக்கர் (DigiLocker): மதிப்பெண் சான்றிதழை DigiLocker மூலமாகவும் பெறலாம்.
முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:
results.cisce.org என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
படிப்பைத் தேர்ந்தெடுக்கவும் (ICSE – 10th).
உங்களின் Unique ID, Index Number மற்றும் CAPTCHA குறியீட்டை உள்ளிடவும்.
‘Show Result’ என்பதை கிளிக் செய்யவும்.
முடிவுகளைச் சரிபார்த்து, எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் (Print/Download) செய்து கொள்ளவும்.

2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 30 வரை நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் .
[30/04, 10:15 am] pvraj1970: ICSE – Indian Certificate of Secondary Education ஆகும். தமிழில் “இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ்” என்பதாகும்.
இது CISCE (Council for the Indian School Certificate Examinations) எனப்படும் அரசு சாரா தனியார் வாரியத்தால், இந்தியாவில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு கல்வி வாரியத் தேர்வாகும்.












