12 ம் வகுப்பு பொதுத்தேர்வு : தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 19,291 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினர்
தமிழகமெங்கும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 2 ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வுகளான இயற்பியல், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு திறன் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வினை பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 19,141 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

இதில் தமிழ் வழியில் 10,759 மாணவர்களும், ஆங்கில வழியில் 8,382 மாணவர்களும் உள் அடங்குவர்.
இதில் இன்றைய தேர்வினை தமிழ் வழியில் 10,597 மாணவர்களும், ஆங்கில வழியில் 8320 மாணவர்களும் என மொத்தம்18,917 மாணவர்கள் தேர்வினை எழுதினர்.இதில் இன்று 224 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை.

மேலும் இன்றைய தேர்வினை தனித்தேர்வர்கள் தமிழ் வழியில் 378 பேரும் ஆங்கில வழியில் 77 பேரும் என மொத்தம் 455 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர்.

இதில் இன்று தமிழ் வழியில் 323 மாணவர்களும், ஆங்கில வழியில் 51 மாணவர்களும் என மொத்தம் 374 மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள். இன்று 81 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுத வரவில்லை.
தூத்துக்குடி விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் இன்று 114 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 127 மாணவர்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு இருந்த நிலையில் இன்று 114 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 42 பேர், மாணவிகள் 72 பேர் ஆக மொத்தம் மொத்தம் 114 பேர் இன்று தேர்வு எழுதினார்கள். 13 பேர் தேர்வு எழுத வரவில்லை.












