கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை
சார்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம்
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக “திரைப்படமும் இலக்கியமும்” என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் 11.03.2026 (புதன் கிழமை) நேற்று நடைபெற்றது.கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர்.மதிவண்ணன் தலைமை வகித்தார்.
கருத்தரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர்.தயாளகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “திரைப்படமும் இலக்கியமும்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் நிகழ்த்திய உரையில் திரைப்படமும் இலக்கியமும் இரு துருவங்களின் சங்கமம் என்றும் இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் உள்ள உறவு மற்றும் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முதல் இன்றைய காலகட்ட படைப்புகள் வரை திரை காவியங்களாக மாறியது குறித்தும் மாணவர்களுக்கு பல்வேறு இலக்கியக் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

மாணவ, மாணவியர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆங்கிலத்துறையின் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இக் கருதரங்கத்திற்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர்.அருணாச்சலம் வழிகாட்டுதலின்படி துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.












