தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேசிய அறிவியல் தின போட்டியில் வெற்றி பெற்ற பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அறிவியல் தினம் ஆனது தூத்துக்குடி சி. வ அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி சர். சி வி. ராமன்- ஐ நினைவு கூறும் வகையில் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய அறிவியல் தினத்தில் பாட்டுப்போட்டி, பேச்சு போட்டி, நடன போட்டி, அறிவியல் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் வினாடி வினா என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.


அனைத்து போட்டிகளிலும் தூத்துக்குடி மாவட்டம் பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுப் போட்டியில் பங்குபெற்ற   தீபிகா என்ற மாணவி முதல் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவி மற்றும் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களையும் .பள்ளி நிர்வாகத்தினர், பள்ளித் தலைமை ஆசிரியை மரியஅனிதா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் பாராட்டினர்.