தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் எச்.ஐ.வி.விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் எச்.ஐ.வி.விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) ரெட் ரிப்பன் கிளப், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு (DAPCU), தூத்துக்குடி இணைந்து 17.02.2026 அன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஸ்டார் அரங்கத்தில் “Know HIV, No Fear” என்ற தலைப்பில் ஃபிளாஷ் மாப் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்களிடையே எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தவறான நம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் சமூக அவமதிப்பை ஒழித்தல் ஆகும். மாணவிகளின் உற்சாகமான ஃபிளாஷ் மாப் நிகழ்ச்சி மூலம் எச்.ஐ.வி. பற்றிய விழிப்புணர்வு செய்திகள் எளிமையாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் வேலையா மற்றும் மாவட்ட மேற்பார்வையாளர் மகாராஜா மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எச்.ஐ.வி. பரவும் வழிகள், தடுப்பு முறைகள், உண்மை மற்றும் தவறான நம்பிக்கைகள், ஆரம்ப கட்டத்தில் பரிசோதனையின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தனர். எச்.ஐ.வி. குறித்து சரியான அறிவு இருந்தால் பயம் தேவையில்லை என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சி, செயலர் அருட்சகோதரி முனைவர். குழந்தை தெரேஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர். ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர். எழிலரசி மற்றும் சுயநிதி பிரிவு இயக்குநர் அருட்சகோதரி முனைவர். ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் சிறப்பு வாழ்த்துகளுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர். அனிலா மெய்லி பணியாற்றினார்.

நிகழ்ச்சியை உயிரியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். ஷெர்லி கிராஸ், வணிகத் துறை உதவி பேராசிரியர் முனைவர். மரிய டெலிசியா ஹெலினா மற்றும் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். ஜோஸ்பின் கிளாடியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் நிறைவடைந்தது.