தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு விழா
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 13/02/26 அன்று விளையாட்டு விழா நடைபெற்றது.
ஆங்கிலத் துறைத் தலைவி முனைவர். ஆரோக்கிய அனுப்பிய மெல் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தலைவர் ஜான் ஜெபமணிக்கு கல்லூரி செயலர் அருட்.சகோதிரி முனைவர்.ரோசா குட்டி மற்றும் கல்லூரி முதல்வர் அருட்.சகோதரி முனைவர். ரூபா, பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள்.
கல்லூரி முதல்வர் மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் மற்றும் ஹாக்கி பயிற்சியாளர் ஜார்ஜ் எஸ்டர் – க்கு கேடயம் வழங்கினார்.
ஹோலி கிராஸ் பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ஜாக்லின் பிரகாஸ் , கல்லூரி துணை முதல்வர் முனைவர். மதுரவல்லி, கைப்பந்து கோ கோ பயிற்சியாளர் ரமேஷ் கலந்து கொண்டனர்.
மாணவிகள் கண்கவர் அணி வகுப்பு நிகழ்வு நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஜான் ஜெபமணி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்பு கல்லூரியின் விளையாட்டு வீராங்கனைகளால் ஒளி தீபம் ஏற்றப்பட்டது. விளையாட்டு வீராங்கனையின் தலைவி செல்வி அர்ச்சனா கூற அனைவரும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளை சிறப்பு விருந்தினர் தொடங்கி வைத்தார். மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர் ஜான் ஜெபமணி மாணவிகளின் உடற்திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களது உடல் உள்ள ஆன்மாவை தூய்மைப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்ற சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
இவ்விழாவினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி பேராசிரியர் தங்கமலர் ஏற்பாடு செய்திருந்தார்.












