Breaking News
பிப்ரவரி – 08 திடீர் ரத்தான தமிழ்நாடு
குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15-ல் நடைபெறும்! டிஎன்பிஎஸ்சி
தொழில்நுட்பநக் காரணங்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி – 08 )நடைபெற இருந்த தமிழ்நாடு குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த தேர்வுகள் மார்ச் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என டிஎன்பிஎஸ் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் மூலமாக (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 2 (குரூப் 2, குரூப் 2ஏ) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்துக்கு தேர்வு எழுதச் சென்றவர்கள் பலரின் பதிவு எண் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், அங்கு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு ரத்து செய்யப்படுவாக தேர்வாணையம் அறிவித்தது.

இதனால் மாநிலத்தின் பல்வேறு தேர்வு மையங்களில் ஆா்வமுடன் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த தோ்வா்கள் திடீரென தோ்வு ரத்து செய்யப்பட்டதாகக்கூறி அறையை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனா். இதனால், தேர்வு எழுதியவர்கள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு மார்ச் 08 :
இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் , தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் நடைபெற இருந்த தேர்வு
ரத்து செய்யப்பட்ட நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும், அந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், தேர்வர்கள் வழக்கமான முறையில் ஓடிஆர் எண்ணைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.












