சோழபுரம் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாக வேலை வாய்ப்பு முகாம் (Campus Placement)

சோழபுரம் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாக வேலை வாய்ப்பு முகாம் (Campus Placement)

தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரி, வளாகத்தில்,
மாணவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், TVS
Training Services நிறுவனம் வளாகத் தேர்வு முகாமை நடத்தியது.

இந்த நிகழ்வு கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு
செய்யப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள்

இணைப்பாளர் (Coordinator) : செல்வகுமார்

இயக்குனர் (Director) :பிரேமலதா

முதல்வர் ( Principal ) பாண்டிசெல்வி
வழிகாட்டுதலில் நிகழ்ச்சியின் நடைபெற்றது.

நிறுவனம்

Shivaraj ( HR – TVS)

TVS Training Services — தொழில்துறை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் முன்னணி நிறுவனம்.

Duraipandi ( Essae group )

Essae chandaran institute uddhara training center ( 19 – மாணவர்கள் இந்த கம்பெனியில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளன )

தேர்வு செய்யப்பட்ட துறைகள்
வளாகத் தேர்வில் கீழ்க்கண்ட துறைகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்:

மின்இயந்திர பொறியியல் (EEE)

இயந்திர பொறியியல் (Mechanical)
தேர்வு முடிவுகள்

மொத்தம் 19 மாணவர்கள் TVS Training Services நிறுவனத்தில் பணியமர்த்தப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் இதயம் கனிந்த
பாராட்டுகளை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் தொழில்
வளர்ச்சிக்காக தொடர்ந்து இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்த கல்லூரி
உறுதியளிக்கிறது.