தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் 77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 77-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 77-வது குடியரசு தினவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியை மாரியம்மாள் வரவேற்று பேசினார். சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஜெயாசண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு குடியரசு தினவிழா வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. ஆசிரியை சிவகாமி நன்றி கூறினார். ஆசிரியை கிருபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நிறைவாக மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு தேசியகீதத்துடன் விழா நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் பிரியங்கா மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.













