தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினம் – உறுதிமொழி ஏற்பு
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதி ‘தேசிய வாக்காளர் தினம்’ கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி, கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் 23.01.2026 அன்று காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வ.உ.சி. கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த 187 மாணவ ஆசிரியர்களும் 13 ஆசிரியர் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கான உறுதிமொழியை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும் தேர்தல் கல்வியறிவு குழு (Electoral Literacy Committee) ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.ராஜதுரை வாசித்தார்.












