தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி விளையாட்டு மைதானத்தின் நடுவே சுற்றிலும் கரும்புகள் கட்டப்பட்டு, அடுப்புகள் வைத்து அதில் வெண்கலப் பானையில் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர்.
மாணவ, மாணவியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சட்டை, பாவாடை,தாவணியில் கலந்து கொண்டு பொங்கல் பொங்கி வரும் பொழுது ஒரே சமயத்தில் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
மாணவ – மாணவிகள் நம்முடைய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பயிற்சி ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கரும்பு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.












