தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி : தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி சாம்பியன்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி :
தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி சாம்பியன்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விலங்கியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் “காலநிலை மாற்றமும் உலகளாவிய பொறுப்பும்” என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் – (FauniQ’26), 09.01.2025 அன்று நடத்தியது.

இப்போட்டிகளில் 11 கல்லூரிகளைச் சேர்ந்த 146 மாணவர்கள் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு உபதலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட 10 விதமான போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்திய வாணிப மற்றும் தொழில் மன்றத்தின் செயலாளர் பொன் வெங்கடேஷ் நிறைவுரையாற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் முக்கியப் பங்கையும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்களின் பொறுப்பையும் வலியுறுத்தினார்.

மொத்தமாக 27 முதல் பரிசுகளும், 20 இரண்டாம் பரிசுகளும், முதன்மை விருந்தினர், கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராதிகா ஆகியோரால் வழங்கப்பட்டன.

மொத்த சுழற்கோப்பையை தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி வென்றதாக வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு அறிவித்தார்.