தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்கவும் துணிப்பையை பயன்படுத்தும் படி நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு பசுமைப் படை மாணவ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பொறுப்பாசிரியர்ராஜகுமார் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி துணிப்பை ஏன் அவசியம் என்பதை எடுத்துக் கூறினார்.

சிறப்புரையாக ஆசிரியர் ஜெயிலின் நாம் ஏன் துணிப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த கருத்துக்களை எடுத்து கூறினார்.
அனைவரும் துணிப்பையே பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்தனர்.
வருங்காலங்களில் பாலித்தீன் பைகளுக்கு பதிலாக நாம் துணிப்பை பயன்படுத்துவோம் அதுதான் உடலுக்கு நல்லது என்று கருத்து எடுத்துக் கூறப்பட்டது.












