தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா :

தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா :

தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியை ருபினா ரொட்ரிகோ தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை கெத்ஸி பாய் முன்னிலை வகித்தார்.

நவீன இந்தியாவின் சிற்பி நேரு என்ற தலைப்பில் மாணவி ஜெராபின் சொற்பொழிவாற்றினார். குழந்தைகள், நேரு, காந்தி, காமராஜர், பாரதியார், வேலு நாச்சியார், சரோஜினி நாயுடு மற்றும் அலைபேசி போன்று மாறுவேடம் அணிந்து வந்தனர்.

கொடி காத்த குமரன் நாடகம் நடத்தப்பட்டது. பழங்கால நாணயங்கள் பானைகள் வைத்து தொல்லியல் கண்காட்சி நடத்தப்பட்டது. குழந்தைகள் தின விழா போட்டிகள் அறிவியல் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி மோகிதா நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை ஆசிரியை ஜெயப்பிரியா மற்றும் சமூக அறிவியல், தொல்லியல் மன்ற ஆசிரியைகள் செய்து இருந்தனர்.